கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்களைத் தணிக்கும் வகையில் சில நடவடிக்கைகளையும் புதிய கடன் வசதிகளையும் பொதுத் துறை வங்கிகள் அறிவித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளானது பிணையமும் இன்றி ஒரு தனிநபருக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க உள்ளது.
இந்தக் கடன் தொகையினை அவருடைய மற்றும் அவரது குடும்பத்தினருடைய மருத்துவச் செலவிற்கு உபயோகித்து கொள்ளலாம்.
இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் பாரத ஸ்டேட் வங்கியும் மும்பையில் மூன்று புதிய கடன் வசதிகளை அறிவித்துள்ளன.
ஒரு கடன் வசதியில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள் (அ) மருந்தகங்கள், ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்கள், நோயியல் ஆய்வகங்கள், செயற்கை சுவாசக் கருவிகள், தடுப்பு மருந்து இறக்குமதியாளர்கள், கோவிட் மருந்து தளவாட நிறுவனங்கள் மற்றும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை போன்றவற்றிற்கு கடன்களை வழங்கும்.
மற்ற இரு கடன் வசதிகளுள் 2 கோடி ரூபாய் வரையிலான சுகாதார நல வர்த்தக கடனும், 1000 கோடி ரூபாய் வரையிலான சுகாதார நல வசதிகளுக்கான வர்த்தக கடனும் அடங்கும்.