இந்த திட்டம் மத்திய அரசாங்கத்தின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முயற்சியின் கீழ் வருகிறது.
இக்கப்பல் தளமானது இந்தியக் கடலோரக் காவல்படைக்கு அனுப்பப்படும் ஆறு கடல் சார் ரோந்து கப்பல்களை இதுவரை வழங்கியுள்ளது.
அவை முறையே ஐ.சி.ஜி.எஸ் விக்ரம், ஐ.சி.ஜி.எஸ் விஜயா, ஐ.சி.ஜி.எஸ் வீரா, ஐ.சி.ஜி.எஸ் வராஹா, ஐ.சி.ஜி.எஸ் வரத் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் வஜ்ரா (37) ஆகும்.
வரத்
எல் & டி நிறுவனத்தால் கட்டப்பட்ட கடல் சார் ரோந்து கப்பல் ஐ.சி.ஜி.எஸ். வரத், பிப்ரவரி 28, 2020 அன்று இந்தியக் கடலோர காவல் படையுடன் (ஐ.சி.ஜி) இணைக்கப் பட்டது.
இதை மத்தியக் கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவி, சென்னை அருகே உள்ள எல் & டி காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் துவக்கி வைத்தார்.
ஐ.சி.ஜி.எஸ் வரத் கப்பலானது ஒரே முயற்சியில் அனைத்துக் கடல் ஏற்பு சோதனைகளிலும் தேர்ச்சிப் பெற்ற முதற் கடற்படைக் கப்பலாக, கப்பல் கட்டுமானத் துறையில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இக்கப்பலின் தொடர்ந்து செயல்படும் திறன் (Endurance) 5,000 கடல் மைல்களாகும் மற்றும் இதன் அதிகபட்ச வேகம் 26 நாட்ஸ் (Knots) ஆகும்.
யார்டு 45006 வஜ்ரா
பிப்ரவரி 27, 2020 அன்று ஆறாவது கடல் ரோந்து கப்பல் (ஒ.பி.வி ) “யார்டு 45006 வஜ்ரா” மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.
இது கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது பகல் மற்றும் இரவு ரோந்துக்குப் பயன்படுத்தப்படும்.
ஒ.பி.வி 7 தொடரில் இது ஆறாவது கப்பலாகும். இது லார்சன் & டூப்ரோவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் குறிக்கோள்கள்,
7500 கி.மீ. பரந்த கடற்கரையையும், 20 லட்சம் சதுர கி.மீ.க்கு மேலான பிரத்தியேக பொருளாதார மண்டலத்தையும் (Exclusive Economic Zone) பாதுகாக்க இந்தியக் கடலோரக் காவல்படையின் முயற்சிகளை வலுப்படுத்துவதும் மற்றும்,
உலகளாவிய வர்த்தகத்திற்காக வருடம் முழுவதும் இந்தியக் கடல் மார்க்கமாகச் செல்லும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதும் ஆகும்.