இந்தியாவில் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட முதல் அடுத்த தலைமுறை கதிரியக்க எதிர்ப்பு ஏவுகணையானது (Next Generation Anti-Radiation Missile -NGRAM) ஓடிசாவின் பாலசோரில் உள்ள ஏவுகணை சோதனைப் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
நிலத்திலிருந்து வானுக்குப் பாயும் ஏவுகணையாக DRDO அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது சுகாய்-30 MKI போர் விமானத்திலிருந்து செலுத்தப்பட்டது.
இந்த அடுத்த தலைமுறை ஏவுகணையானது 100 கி.மீ. தொலைவுக்கு இலக்கைத் தாக்கும் திறனுடையது.
ரஷ்யாவுடன் இணைந்து ஒலியை விட வேகமாக செல்லும் மீயொளி ஏவுகணையான பிரமோஸ் என்ற ஏவுகணையை உருவாக்கிய பிறகு DRDO-ஆல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நிலத்திலிருந்து வானுக்குப் பாயும் முதல் ஏவுகணை இதுவேயாகும்.