TNPSC Thervupettagam

புதிய கனிமம் கண்டுபிடிப்பு

September 30 , 2019 1756 days 649 0
  • கனடாவில் உள்ள அல்பர்டா பல்கலைக் கழகத்தின் வைரங்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பள்ளியைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோல்ட்சிமிடைட் - 03 என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய கனிமத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது தென்னாப்பிரிக்காவில் டீ பியர்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற கோபியோன்டைன் குழாய் என்ற சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வைரத்தின் உள்ளே கண்டறியப் பட்டது.
  • நவீனப் புவி வேதியியலின் நிறுவனர் விக்டர் மோரிட்ஸ் கோல்ட்ஸ்கிமிட்டின் நினைவாக இது கோல்ட்சிமிடைட் என்று பெயரிடப்பட்டது.
  • இது பூமிக்கடியில் 170 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏறக்குறைய 1200º செல்சியஸ் வெப்ப நிலையில் இந்தக் கனிமம் உருவாக்கப்பட்டதாக மதிப்பிடப் பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்