உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டில் உலகம் முழுவதுமுள்ள 4 மில்லியன் புதிய காசநோயாளிகளில் 64 சதவீதத்தினரைக் கொண்டு, 7 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் காசநோயானது பெரும்பாலும் நுரையீரலைப் பாதிக்கிறது.
இது குணப்படுத்தக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய நோயாகும். இது ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்று நோயாகும்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் அறிக்கையின்படி, இந்தியாவைப் பின் தொடர்ந்து இந்தோனேஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இடம்பிடித்துள்ளன.
சீனா மற்றும் ரஷியாவோடு சேர்ந்து இந்தியா, 2016-ல் பதிவு செய்யப்பட்ட 4,90,000 பல்வகை மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட காசநோய் பாதிப்புடையவர்களில் பாதியைக் கொண்டுள்ளது.
பல்வகை மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட காசநோய் (MDR-TB) என்பது குறைந்தபட்சம் ஐசோநியாசிட் மற்றும் ரிஃபாம்பின் போன்ற மிகவும் சக்திவாய்ந்த முதல் வரிசை காசநோய் தடுப்பு மருந்துகளின் சிகிச்சைக்கு எதிர்ப்புத் தன்மை கொண்ட பாக்டீரியாவால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு வகை காச நோய்த் தொற்றாகும்.