TNPSC Thervupettagam

புதிய காச நோயாளிகள் பட்டியல்- இந்தியா முதலிடம்

October 31 , 2017 2580 days 899 0
  • உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டில் உலகம் முழுவதுமுள்ள  4 மில்லியன் புதிய காசநோயாளிகளில் 64 சதவீதத்தினரைக்  கொண்டு, 7 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் காசநோயானது பெரும்பாலும் நுரையீரலைப் பாதிக்கிறது.
  • இது குணப்படுத்தக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய நோயாகும். இது ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்று நோயாகும்.
  • உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் அறிக்கையின்படி, இந்தியாவைப் பின் தொடர்ந்து இந்தோனேஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இடம்பிடித்துள்ளன.
  • சீனா மற்றும் ரஷியாவோடு  சேர்ந்து இந்தியா, 2016-ல் பதிவு செய்யப்பட்ட  4,90,000 பல்வகை மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட காசநோய் பாதிப்புடையவர்களில்  பாதியைக் கொண்டுள்ளது.
  • பல்வகை மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட காசநோய் (MDR-TB) என்பது குறைந்தபட்சம்  ஐசோநியாசிட் மற்றும் ரிஃபாம்பின் போன்ற மிகவும் சக்திவாய்ந்த முதல் வரிசை காசநோய் தடுப்பு மருந்துகளின் சிகிச்சைக்கு  எதிர்ப்புத் தன்மை கொண்ட பாக்டீரியாவால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு வகை காச நோய்த் தொற்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்