மத்தியப் பிரதேசத்தின் 18-வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கமல்நாத் டிசம்பர் 17அன்று மத்திய பிரதேசத்தின் கான்பூரில் பதவியேற்றார்.
ஆளுநர் ஆனந்திபென் படேல் கமல்நாத்திற்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவர் 2005 முதல் 2018 டிசம்பர் 16 வரை முதல்வர் பதவியிலிருந்த சிவராஜ் சிங் சவுகானையடுத்து பதவியேற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 230 சட்டசபை உறுப்பினர்களில் 1 சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் மற்றும் 2 பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 4 சுயேட்சை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் பெரும்பான்மைக்குத் தேவையான 116 உறுப்பினர்களை விட அதிகமான இடங்களை காங்கிரஸ் பெற்றது.