இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தேசிய மீன் மரபணு வளங்கள் கழகமானது ஒரு புதிய கெளுத்தி மீன் இனத்தினைக் கண்டறிந்துள்ளது.
இந்தப் புதிய கெளுத்தி மீன் இனமானது பங்காசியஸ் இனத்தைச் சேர்ந்தது.
இது சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்தப் புதிய இனமானது உண்ணக்கூடியதாகும் என்ற நிலையில் இதனை உள்ளூர் மக்கள் தமிழில் ஆய் கெளுத்தி என்று அழைக்கிறார்கள்.
இந்த இனத்தின் நிறைவகையானது லக்னோவில் உள்ள தேசிய மீன் அருங்காட்சியகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தேசிய மீன் மரபணு வளங்கள் கழகத்தின் களஞ்சியத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த இனத்தின் பெயரானது Zoo Bank எனப்படும் சர்வதேச விலங்கியல் பெயரிடல் ஆணையத்தின் இணைய வழிப் பதிவு அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.