TNPSC Thervupettagam
January 9 , 2019 2148 days 714 0
  • நாசாவின் “வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கைக் கோளானது” (TESS -Transiting Exoplanet Survey Satellite) HD21749 எனும் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் HD21749b எனும் பெயரிடப்பட்ட புதிய கோளைக் கண்டறிந்துள்ளது.
  • இந்த கோளானது பூமியிலிருந்து 53 ஒளியாண்டு தொலைவில் உள்ள மங்கலான ரெடிகுலம் எனும் நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்துள்ளது.
  • HD21749b ஆனது நமது சூரியனைப் போல் ஒளி வீசும் சூடான நட்சத்திரமான அதன் மைய நட்சத்திரத்தினை 36 புவி நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகின்றது.
  • இது பூமியை விட மூன்று மடங்கு பெரியதும் 23 மடங்கு அதிக நிறையையும் உடையதாகும். அதாவது திண்மமாக அல்லாமல் வாயுக் கோளாக இருக்கும் இது ஒரு துணை நெப்டியூன் கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்