TNPSC Thervupettagam

புதிய சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள்

July 21 , 2022 730 days 377 0
  • புதிய சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் ஆனது 2022 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
  • பன்னீர், அரிசி, கோதுமை, வெல்லம், தயிர் மற்றும் லஸ்ஸி போன்ற முன்பே பொதியிடப் பட்டு நிறுவனப் பெயர் முத்திரையிடப்பட்டத் தயாரிப்புகள் உட்பட பல உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளன.
  • இந்த அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி முதல் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியானது விதிக்கப்படுகிறது.
  • உலர்ந்த மக்கானா, பொறி, மெஸ்லின் மாவு, முத்திரையிடப்பட்ட இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றுக்கும் 5 சதவீத அளவில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும்.
  • இந்தப் பொருட்கள் அனைத்திற்கும் முன்பு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • இது தவிர, மாம்பழக் கூழ் உட்பட அனைத்து வகையான மாம்பழங்களுக்கும் இப்போது 12% அளவில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.
  • இருப்பினும், எடை அளவில் வழங்கப்படும் பொருட்கள், முத்திரையிடப்படாத மற்றும் பெயரிடப் படாதப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படும்.
  • உணவகங்கள் மற்றும் வங்கிச் சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
  • காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்ட வங்கிச் சேவைகளுக்கான புதிய சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் தற்போது 18% ஆக இருக்கும்.
  • தங்கும் விடுதி அறைகளுக்கு 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் விதிக்கப் படும்.
  • முன்னர் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து இவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்