மணிப்பூரின் மலை ஏரிகளில் சாலமண்டரின் புதிய ‘ஒத்த’ இனத்தினை இந்திய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புதிய இனங்கள் டைலோடோட்ரிடான் சைமெங் எனப்படுகின்றன.
இந்த இனமானது இதுவரை அதனுடன் தொடர்புடைய மற்ற இனங்களான டைலோடோட்ரிடான் ஹிமாலயனஸ் மற்றும் டைலோடோட்ரிடான் வெருகோசஸ் என்று தவறாகக் கருதப் பட்டது.
மணிப்பூரில் உள்ள கோங்தெங் மலைத்தொடரின் மேலே, கடல் மட்டத்திலிருந்து 2,215 மீ உயரத்தில் அமைந்துள்ள சைமெங் என்ற மலை ஏரியின் பெயரில் இந்தப் புதிய இனத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
சைமெங் என்பது "புதிர்மிக்க ஏரி" அல்லது "மர்ம ஏரி" என்று பொருள்படும் லியாங்மெய் வட்டாரச் சொல்லாகும் .