மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகமானது, தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index for Industrial Workers - CPI-IW) அடிப்படை ஆண்டை 2001 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டாக திருத்தியுள்ளது.
இது மாறிவரும் நுகர்வு முறையைப் பிரதிபலிக்கும் வகையில் உடல்நலம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பிற இதரச் செலவுகளுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து, அதே நேரத்தில் உணவு மற்றும் பானங்களின் செலவு விகிதத்தைக் குறைத்துள்ளது.
சில்லறை விலையில் பணவீக்கத்தை அளவிட இது பயன்படுத்தப்படுகிறது.
இது அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்துறை ஊழியர்களின் அகவிலைப் படியை (டிஏ) ஒழுங்குபடுத்துவதற்கும், பட்டியலிடப்பட்ட வேலைகளில் குறைந்தபட்ச ஊதிய அளவைத் திருத்துவதற்கும் பயன்படுத்தப் படுகிறது.