அமலாக்க இயக்குநரகத்தில் (Enforcement Directorate - ED) புதிய சிறப்பு இயக்குநராக விவேக் R. வடேகரை (1991 IRS) நியமிக்க நியமனங்களுக்கான மத்திய கேபினேட் அனுமதி வழங்கியுள்ளது.
அமலாக்க இயக்குநரகத்தில் (Enforcement Directorate-ED) புதிய சிறப்பு இயக்குநராக இவர் 5 ஆண்டுகள் என்ற பதவிக் காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு நிறுவனமான அமலாக்க இயக்குநரகமானது பணமோசடித் தடுப்புச் சட்டம் (PMLA- Prevention of Money Laundering Act) மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act -FEMA) போன்ற சட்டங்களை நாட்டில் அமல்படுத்தும் நிறுவனமாகும்.