இரிஞ்சல்குடம் என்னுமிடத்திலுள்ள கிறித்துவர் கல்லூரியின் விலங்கியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள், தெஹ்னிப்பாலத்திலுள்ள கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஒரு புதிய மரவட்டை இனத்தினையும் வயநாடு வனவிலங்குச் சரணாலயத்தில் ஒரு புதிய சிலந்தி இனத்தினையும் கண்டறிந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள வனவிலங்குச் சரணாலயத்தின் தோல்பெட்டி வனப் பிரிவின் ஈர இலையுதிர் காடுகளில் இருந்து கண்டறியப்பட்ட புதிய சிலந்தி இனத்தின் பெயர் கார்ஹோட்டஸ் தோல்பெட்டியென்சிஸ் (Carrhotus tholpettyensis) என்பதாகும்.
ஆராய்ச்சியாளர்கள் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒரு புதிய மர வட்டை இனத்தினையும் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புதிய இனத்திற்கு டெலார்த்ரம் அனோமலான்ஸ் (Delarthrum anomalans) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இது பாராடோக்சோமட்டிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.