TNPSC Thervupettagam

புதிய சிவப்புக் கடற்பாசி இனங்கள்

March 31 , 2021 1210 days 654 0
  • இந்தியாவின் கடற்கரையோரத்தில் இரண்டு புதிய  சிவப்புக் கடற்பாசி இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இவற்றை உரைக் கூழ் (ஜெல்லி) மற்றும் பனிக்கூழ் (ஐஸ்கீரிம்) தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தலாம்.
  • கடல்சார் தாவரவியலாளர்கள் குழுவொன்று, தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரியின் கடற்கரையோரம், குஜராத், டாமன் மற்றும் டையூ கடற்கரையோரங்களில் இந்தப் பூர்வீக கடற்பாசி இனங்களைக் கண்டறிந்துள்ளது.
  • ஹைப்னியா இண்டிகா மற்றும் ஹைப்னியா புல்லட்டா (Hypnea indica and Hypnea Bullata) ஆகிய இந்த இரு வகைகளும் கன்னியாகுமரியில் கண்டறியப் பட்டுள்ன.
  • மிருதுவான மற்றும் மயிரிழைகளை உடைய பாசியான ஹைப்னியா இண்டிகா குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர் மற்றும் சோம்நாத் பதானில் கண்டறியப் பட்டுள்ளது.
  • ஹைப்னியா புல்லட்டா டாமன் மற்றும் டையூவின் கடற்கரையோரப் பகுதிகளில் வளர்ந்துள்ளன.
  • இந்தியக் கடற்கரையோரப் பகுதிகளில் சிவப்புக் கடற்பாசி இனம் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்