சீனா தனது நீர் நிலம் ஆகிய இருவழி பயன்பாடு சார்ந்த தாக்குதல் கப்பல்களில் ஒன்றை சீரொளிக் கற்றையினால் இயங்கும் ஒரு ஆற்றல் ஆயுதத்தினைப் பொருத்தி உள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் (PLAN) 071 ரக நீர் நிலம் ஆகிய இருவழிப் பயன்பாடு சார்ந்த தளவாடப் பரிமாற்றுக் கப்பலில் சீரொளிக் கற்றை சார் ஆயுதத்தை நிறுவியுள்ளது.
அமெரிக்கக் கப்பலில் நிறுவப்பட்ட சீரொளிக் கற்றை சார் ஆயுதம், அதிகாரப் பூர்வமாக சீரொளிக் கற்றை சார் ஆயுத அமைப்பு செயல்முறை கட்டமைப்பு (LWSD) Mk 2 Mod 0 என்று அழைக்கப்படுகிறது.
எதிரி நாடுகளின் ஆயுத அமைப்புகள் அல்லது ஆயுதங்களில் ஒளியிழை உணர்விகள் மற்றும் தேடு கருவிகளிலிருந்து மறையச் செய்யும் ஒளிமிகு கருவியாக இதனைப் பயன்படுத்தலாம்.