TNPSC Thervupettagam

புதிய செம்மொழிகள்

October 8 , 2024 13 hrs 0 min 44 0
  • மராட்டியம், வங்காளம், பாலி, பிராகிருதம் மற்றும் அசாமியம் ஆகிய புதிய ஐந்து மொழிகளுக்கும் 'செம்மொழி' அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், இந்த அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கையானது ஆறில் இருந்து 11 ஆக (இரு மடங்காக) உயரும்.
  • இதற்கு முன்னதாக தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகள் இந்த அந்தஸ்தினைப் பெற்றுள்ளன.
  • 2004 ஆம் ஆண்டில் தமிழுக்கு தான் முதன்முதலில் செம்மொழி அந்தஸ்து வழங்கப் பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டில் ஒடியா மொழிக்குத் தான் கடைசியாக செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • புதியதாக செம்மொழி அந்தஸ்து பெறும் இந்த மொழிகளுக்கென தேசிய விருதுகள், பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பிரிவுகள் (இருக்கைகள்) மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை உரிய காலத்தில் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்