ஜப்பான் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் டெரோசர் இனங்களின் மாதிரியானது ஹொக்கைடோவில் உள்ள யெசோ குழுவினைச் சேர்ந்தது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த ஒரு உயிரினமானது டெரோசார் குடும்பமான அஸ்தார்ச்சிடேயின் குயிட்ஷால்கோட்லினே எனப்படுகின்ற துணைக் குடும்பத்தின் ஓர் அங்கமாகும்.
210 முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையக் காலத்தில் வாழ்ந்த டெரோசார் பறக்கும் ஊர்வன இனங்களாகும்.
அவை புவியில் வாழ்ந்த முதல் பறக்கும் முதுகெலும்புயிரிகள் ஆகும் என்ற நிலையில் பறவைகள் மற்றும் வெளவால்கள் அதன் பின்னரே தோன்றின.