TNPSC Thervupettagam

புதிய தபால் அலுவலக மசோதா – 2023

December 7 , 2023 227 days 126 0
  • 125 ஆண்டுகள் பழமையான 1898 ஆம் ஆண்டின் இந்திய அஞ்சல் அலுவலகச் சட்டத்திற்கு மாற்றான அஞ்சல் அலுவலக மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது.
  • இது மத்திய அரசின் பங்கை மறுவரையறை செய்து தபால் சேவைகள் இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • இந்திய அஞ்சல் துறையின் தலைவராக பொது தபால் சேவைகள் இயக்குநர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
  • இது அஞ்சல்களில் அரசின் இடைமறிப்பு, பொறுப்பு விலக்குகள் மற்றும் சில குற்றங்கள் மற்றும் அபராதங்களை நீக்குதல் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்திய அஞ்சல் சேவை மூலம் அனுப்பப்படும் சில கடிதங்களை அரசாங்கம் இடை மறிக்கலாம்.
  • தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் கீழ் புது தில்லியை தலைமையகமாகக் கொண்டு இந்திய அஞ்சலகச் சேவை செயல்படுகிறது.
  • இது 1854 ஆம் ஆண்டில் டல்ஹவுசி பிரபுவால் அரசின் சேவையாக உருவாக்கப்பட்டது.
  • 2014 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 5,000 புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், தபால் நிலையங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்