லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது மறுசுழற்சி செய்யப்படக்கூடிய புதிய தலைமுறை நெகிழிகளை உருவாக்கியுள்ளது.
இது பாலி டைக்டோஎனமைன் அல்லது பிடிகே நெகிழி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவற்றைத் தரம் மற்றும் செயல்பாட்டின் இழப்பு இல்லாமல் நிறம், வடிவம் மற்றும் உருவம் கொண்ட ஒரு புதிய பொருளாக மறுசுழற்சி செய்ய முடியும்.
இது எவ்வாறு வேறுபடுகின்றது?
நடைமுறையில் உள்ள நெகிழிகளானது பாலிமர்களால் தயாரிக்கப்படுகின்றது.
மோமெர்கள் எனப்படும் மீண்டும் நிகழும் குறைந்த அளவு கார்பன் அலகுகளைக் கொண்டுள்ள பொருட்களை பாலிமர்கள் கொண்டிருக்கும்.
இந்த மோமெர்களுடன் சேர்க்கப்படும் கூடுதலான இரசாயனங்கள் பிரிக்க முடியாத பிணைப்புகளை ஏற்படுத்துகின்றது.
மிக அதிகமாக மறுசுழற்சி செய்யப்படும் PET (பாலி எத்திலீன் டெரப்தலேட்) என்ற நெகிழியும் கூட 20-30 சதவிகிதம் என்ற அளவில் தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றது.
ஆனால் PDK நெகிழியில் உள்ள மோனோமெர்களை அதிக அமிலத் தன்மை கொண்ட கரைசலில் வைத்து எடுப்பதன் மூலம் கூட்டுச் சேர்க்கைப் பொருட்களிலிருந்து பிரித்தெடுக்க முடியும்.