TNPSC Thervupettagam

புதிய தலைமை தேர்தல் ஆணையர் - ஞானேஷ் குமார்

February 19 , 2025 8 days 59 0
  • தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக என்று நியமிக்கப் பட்டுள்ளார்.
  • தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான அதன் புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமை தேர்தல் ஆணையர் இவரேயாவார்.
  • விவேக் ஜோஷி என்பவர் தேர்தல் ஆணையராக பதவி ஏற்றார்.
  • 2023 ஆம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டம் ஆனது, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • பிரதமர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவின் ஒரு கூட்டத்தின் பரிந்துரையை அடுத்து அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தத் தேர்வுக் குழுவில் இந்தியப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உள்ளனர்.
  • ஒரு தலைமை தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர் ஆறு ஆண்டுகள் வரை அல்லது 65 வயது வரை பணியாற்றலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்