கோவா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர் நில பீடபூமிப் பகுதிகளில் (highland plateaus) பெஜேர்வரியா கோயேம்சி (Fejervarya goemchi) எனும் புதிய தவளை இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடமான கோவா மாநிலத்தின் பெயர் கொண்டு இந்த தவளைக்கு பெஜேர்வரியா கோயேம்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்தவளைகள் மிகப் பெரிய அளவிலான நில வாழ் தவளைகளாகும் (terrestrial frogs).
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்ற பிற பெஜெர் வரியா இனங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக மூலக்கூறியல் முறைகள் (molecular methods), புவியியல் பரவல் வரம்புகள் (geographic distribution range) மற்றும் உருவமைப்பு (morphology) ஆகியவற்றின் கூட்டிணைவு பயன்பாட்டின் மூலம் இந்த தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது.