TNPSC Thervupettagam

புதிய தாவரங்கள் மற்றும் விலங்குகள்

June 9 , 2019 1868 days 828 0
  • அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் வகைப்பாட்டியல் வல்லுநர்கள் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 596 புதிய தாவர மற்றும் விலங்கினங்களை ஆவணப் படுத்தியுள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த விவரமானது “இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் (Botanical Survey of India - BSI) மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (Zoological Survey of India - ZSI)” ஆகியவை இணைந்து வெளியிட்ட “தாவர கண்டுபிடிப்புகள் 2018 மற்றும் விலங்குக் கண்டுபிடிப்புகள் 2018” என்ற ஆய்வு நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த மூலக்கூறு டிஎன்ஏ தொழில்நுட்பம் மற்றும் மரபு வழியியல் ஆகியவற்றின் மீது BSI கவனம் செலுத்தி இருக்கின்றது.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்புகளுடன் இந்தியாவின் விலங்கு இனங்களின் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 1,01,681 இனங்கள் உள்ளன. இது உலகின் மொத்த இனங்களில் 6.49 சதவிகிதமாகும்.
  • 59 இனங்களுடன் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 38 இனங்களும் தமிழ்நாட்டில் 26 இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்