அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் வகைப்பாட்டியல் வல்லுநர்கள் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 596 புதிய தாவர மற்றும் விலங்கினங்களை ஆவணப் படுத்தியுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த விவரமானது “இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் (Botanical Survey of India - BSI) மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (Zoological Survey of India - ZSI)” ஆகியவை இணைந்து வெளியிட்ட “தாவர கண்டுபிடிப்புகள் 2018 மற்றும் விலங்குக் கண்டுபிடிப்புகள் 2018” என்ற ஆய்வு நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த மூலக்கூறு டிஎன்ஏ தொழில்நுட்பம் மற்றும் மரபு வழியியல் ஆகியவற்றின் மீது BSI கவனம் செலுத்தி இருக்கின்றது.
இந்தப் புதிய கண்டுபிடிப்புகளுடன் இந்தியாவின் விலங்கு இனங்களின் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 1,01,681 இனங்கள் உள்ளன. இது உலகின் மொத்த இனங்களில் 6.49 சதவிகிதமாகும்.
59 இனங்களுடன் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 38 இனங்களும் தமிழ்நாட்டில் 26 இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.