TNPSC Thervupettagam

புதிய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

October 6 , 2018 2245 days 676 0
  • அமைச்சரவையின் நியமனக் குழுவானது (ACC -Appointments Committee of the Cabinet) புலனாய்வுக் குழுவின் இணைத் தலைவரான RN ரவியை துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக (உள்நாட்டு விவகாரங்கள்) மறு நியமனம் செய்துள்ளது.
  • இவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான (NSA – Natioanl Security Advisor) அஜித் தோவல் என்பவருக்கு 3வது துணை ஆலோசகராக, முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW – Research and Analysis Wing) தலைவரான ராஜிந்தர் கண்ணா மற்றும் வெளியுறவுத் தூதுவராக உள்ள பங்கஜ் சரண் ஆகியோரையடுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போது இந்தியாவில் கீழ்க்காணும் மூன்று அடுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது.
    • பிரதமர் தலைமையிலான தேசியப் பாதுகாப்பு ஆணையம் (NSC - National Security Council)
    • அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான மூலோபாயக் கொள்கை குழு (SPG - Strategic Policy Group)
    • தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (NSAB - National Security Advisory Board)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்