தெலுங்கானாவில் மூன்று புதிய தொல்லியல் தளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, பந்தலா கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரகுட்டா எனுமிடத்தில் தனித்துவமான இரும்புப் பெருங்கற்கால (மெகாலிதிக்) தளத்தைக் கண்டறிந்ததாகக் கூறினர்.
இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மெகாலிதிக் நினைவுச் சின்னங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
வழக்கத்திற்கு மாறாக, இந்த இடத்தில் (ஊரகுட்டா) கண்டுபிடிக்கப்பட்ட தளம் மிகவும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
பக்கவாட்டுக் கற்கள் தொப்பிக் கல்லின் வடிவத்தைப் பின்பற்றிக் கற்கள் கொண்டு அமைக்கப் பட்டுள்ளன.
எனவே, ஒவ்வொரு ‘உயர் கல் பதுக்கைகளும்-டால்மெனாய்டு சிஸ்டு’ தொப்பிக் கல்லினைப் போன்ற ஒரு தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னங்கள் சுமார் கி. மு. 1,000 காலத்தினைச் சேர்ந்தவையாகும்.
பத்ராத்ரி கோத்தகுடம் என்ற மாவட்டத்தில் உள்ள குண்டலா மண்டலத்தில் உள்ள தாமரடோகுவில் இரண்டு புதிய குடைவறைத் தளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.