TNPSC Thervupettagam

புதிய தொல்லியல் தளங்கள் – தெலுங்கானா

April 24 , 2024 245 days 339 0
  • தெலுங்கானாவில் மூன்று புதிய தொல்லியல் தளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, பந்தலா கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரகுட்டா எனுமிடத்தில் தனித்துவமான இரும்புப் பெருங்கற்கால (மெகாலிதிக்) தளத்தைக் கண்டறிந்ததாகக் கூறினர்.
  • இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மெகாலிதிக் நினைவுச் சின்னங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
  • வழக்கத்திற்கு மாறாக, இந்த இடத்தில் (ஊரகுட்டா) கண்டுபிடிக்கப்பட்ட தளம் மிகவும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • பக்கவாட்டுக் கற்கள் தொப்பிக் கல்லின் வடிவத்தைப் பின்பற்றிக் கற்கள் கொண்டு அமைக்கப் பட்டுள்ளன.
  • எனவே, ஒவ்வொரு ‘உயர் கல் பதுக்கைகளும்-டால்மெனாய்டு சிஸ்டு’ தொப்பிக் கல்லினைப் போன்ற ஒரு தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.
  • இந்த நினைவுச் சின்னங்கள் சுமார் கி. மு. 1,000 காலத்தினைச் சேர்ந்தவையாகும்.
  • பத்ராத்ரி கோத்தகுடம் என்ற மாவட்டத்தில் உள்ள குண்டலா மண்டலத்தில் உள்ள தாமரடோகுவில் இரண்டு புதிய குடைவறைத் தளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்