புதிய தொழிற்துறை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தொடர்பான கொள்கைகள்
February 19 , 2021 1434 days 1115 0
பிப்ரவரி 16 அன்று தமிழ்நாடு அரசானது ஒரு புதிய தொழிற்துறைக் கொள்கையை அறிவித்துள்ளது.
இது பின்வரும் 4 முக்கிய குறிக்கோள்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் 10 இலட்சம் கோடி மதிப்புள்ள (135 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடுகளை ஈர்த்தல்
இந்தக் கொள்கை காலத்தில் உற்பத்தித் துறையில் 15% வருடாந்திர வளர்ச்சியை அடைதல்
2030 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை தற்பொழுதுள்ள 25% என்ற அளவிலிருந்து 30% ஆக அதிகரித்தல்.
2025 ஆம் ஆண்டிற்குள் 20 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
MSME கொள்கைகள்
மேலும் முதல்வர் அவர்கள் MSME/ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக ஒரு உறுதியான சூழலமைப்பை வழங்குவதற்காக MSME கொள்கையையும் வெளியிட்டு உள்ளார்.
இது பின்வருவனவற்றை இலக்காக நிர்ணயித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் ரூ.2 இலட்சம் கோடி அளவில் புதிய முதலீடுகளை ஈர்த்தல்
20 இலட்சம் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
புதிய MSME மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றிற்குச் சுயச் சான்றளிப்பு அடிப்படையில் 3 ஆண்டு காலத்திற்கு உருவாக்கம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இந்த அலகுகள் 3 ஆண்டு காலம் முடிவடைந்த 1 ஆண்டிற்குள் கட்டாயமாக ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் புதிய கொள்கையானது MSME நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு மானியங்களுக்கான உச்ச வரம்பை அதிகரித்துள்ளது.
மேலும் MSME நிறுவனங்களுக்குத் தயார் நிலையில் உள்ள வசதிகள்/இடங்கள், காப்பிடம் மற்றும் மனை ஆகியவை மேம்படுத்தப்பட்டு குறைந்த காலக் குத்தகைக்கு வழங்கப்படும்.