இந்தியாவில் பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமான “அஸ்ட்ரோசாட்”-ஐப் பயன்படுத்தி கோள வடிவ நட்சத்திரங்களான NGC 2808-ல் உள்ள புதிய புறஊதா நட்சத்திரக் கூட்டங்களை திருவனந்தபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோள வடிவ நட்சத்திரக் கூட்டம் என்பது ஒரே குழுவாக நகரும் இலட்சக் கணக்கான நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பாகும்.
இந்த நட்சத்திரங்கள் நட்சத்திரக் கூட்டங்களின் ஈர்ப்பு விசையினால் நெருக்கமாக அமையப் பெற்றுள்ளன. மேலும் இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒரே காலகட்டத்தில் உருவானது என்றும் நம்பப்படுகிறது.
NGC 2808 என்பது நாம் அறிந்த மிகப்பெரிய கோள வடிவ நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்றாகும். மேலும் இந்த நட்சத்திரக் கூட்டங்களானது நம்மிடமிருந்து 47,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
அஸ்ட்ரோசாட்டில் உள்ள புறஊதா உருவரைவு தொலைநோக்கியைப் (UVIT - UltraViolet Imaging Telescope) பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்களால் இந்த நட்சத்திரக் குழுக்கள் கண்டறியப்பட்டன.
அஸ்ட்ரோசாட்
அஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதலாவது பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமாகும்.
இது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிஎஸ்எல்வி – எக்ஸ்எல் மூலம் ஏவப்பட்டது.
இஸ்ரோ அனுப்பிய இந்த செயற்கைக் கோள் வெற்றி பெற்றுள்ளது. அஸ்ட்ரோசாட்டின் ஆயுட்காலமான 5 ஆண்டுக் காலம் முடிவடைய இருப்பதையடுத்து அஸ்ட்ரோசாட் – 2 செயற்கைக் கோளை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ பரிந்துரை செய்துள்ளது.
இத்திட்டமானது விண்வெளி ஆய்வகங்களைக் கொண்ட ஒரு பிரத்தியேக நாடுகளின் குழுக்களில் இஸ்ரோவை நிலை நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளியில் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன.