TNPSC Thervupettagam

புதிய நட்சத்திரக் குழுக்கள்

March 13 , 2019 1957 days 553 0
  • இந்தியாவில் பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமான “அஸ்ட்ரோசாட்”-ஐப் பயன்படுத்தி கோள வடிவ நட்சத்திரங்களான NGC 2808-ல் உள்ள புதிய புறஊதா நட்சத்திரக் கூட்டங்களை திருவனந்தபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கோள வடிவ நட்சத்திரக் கூட்டம் என்பது ஒரே குழுவாக நகரும் இலட்சக் கணக்கான நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பாகும்.
  • இந்த நட்சத்திரங்கள் நட்சத்திரக் கூட்டங்களின் ஈர்ப்பு விசையினால் நெருக்கமாக அமையப் பெற்றுள்ளன. மேலும் இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒரே காலகட்டத்தில் உருவானது என்றும் நம்பப்படுகிறது.
  • NGC 2808 என்பது நாம் அறிந்த மிகப்பெரிய கோள வடிவ நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்றாகும். மேலும் இந்த நட்சத்திரக் கூட்டங்களானது நம்மிடமிருந்து 47,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
  • அஸ்ட்ரோசாட்டில் உள்ள புறஊதா உருவரைவு தொலைநோக்கியைப் (UVIT - UltraViolet Imaging Telescope) பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்களால் இந்த நட்சத்திரக் குழுக்கள் கண்டறியப்பட்டன.

        அஸ்ட்ரோசாட்

  • அஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதலாவது பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமாகும்.
  • இது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிஎஸ்எல்வி – எக்ஸ்எல் மூலம் ஏவப்பட்டது.
  • இஸ்ரோ அனுப்பிய இந்த செயற்கைக் கோள் வெற்றி பெற்றுள்ளது. அஸ்ட்ரோசாட்டின் ஆயுட்காலமான 5 ஆண்டுக் காலம் முடிவடைய இருப்பதையடுத்து அஸ்ட்ரோசாட் – 2 செயற்கைக் கோளை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ பரிந்துரை செய்துள்ளது.
  • இத்திட்டமானது விண்வெளி ஆய்வகங்களைக் கொண்ட ஒரு பிரத்தியேக நாடுகளின் குழுக்களில் இஸ்ரோவை நிலை நிறுத்தியுள்ளது.
  • அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளியில் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்