TNPSC Thervupettagam

புதிய நிதி அணுகுமுறை

February 19 , 2025 4 days 44 0
  • 2026-27 ஆம் நிதியாண்டிலிருந்து முதன்மையான நிதி அளவீடாக நிதிப் பற்றாக்குறை என்ற இலக்கிற்குப் பதிலாக கடன்-GDP விகிதத்தினை மாற்ற உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • இது நிதி நிலைத்தன்மையை மிக நன்கு உறுதி செய்தல், வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பொது நிதிகளை நிர்வகிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆனது, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) தொடர்புடைய தேசியக் கடனின் பங்கை அளவிடுகிறது.
  • இது கடந்த காலத்திய மற்றும் தற்போதைய கடன் போக்குகளைக் காட்டுகின்ற நிதி வளத்தின் நம்பகமான குறிகாட்டியாக செயல்படுகிறது.
  • 2031 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை சுமார் 50±1% ஆகக் குறைக்க நீண்டகால இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு ஆனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது முதலில் நிர்ணயிக்கப் பட்ட 4.9% என்ற இலக்கினை விடக் குறைவாகும்.
  • 2025-26 ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.4% ஆக மேலும் குறையும் என்று அரசாங்கம் கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்