TNPSC Thervupettagam

புதிய நீர் மாசுபாடு அபராத விதிகள் 2024

November 17 , 2024 11 days 90 0
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது 1974 ஆம் ஆண்டு நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தை மீறுதல் குறித்த விசாரணைகளை நடத்துவதற்கும் அபராதம் விதிப்பதற்குமான புதிய விதிகளை அறிவித்துள்ளது.
  • நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) (விசாரணை நடத்தும் முறை மற்றும் அபராதம் விதித்தல்) விதிகள், 2024 எனப்படுகின்ற இந்தப் புதிய விதிகள் ஆனது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
  • சமீபத்திய இந்தத் திருத்தத்தின்படி, இந்தச் சட்டம் தொடடர்பான குற்றங்கள் மற்றும் இந்தச் சட்டத்தின் மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமற்றவை என்று குறிப்பிடப்பட்டு, அதற்குப் பதிலாக அபராதம் விதிக்கப்பட்டது.
  • மாசுபாடு ஏற்படுத்தாத ‘வெள்ளை’ வகை தொழிற்துறைகளுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • பல குற்றங்கள், மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதற்கும், தண்டனைகளை நிர்ணயிப்பதற்கும் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசிற்கு அதிகாரம் அளித்தது.
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுக்கள் ஆகியவையும் இதில் ஈடுபடும்.
  • தீர்ப்பளிக்கும் அதிகாரிக்கு, குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது விதி மீறலின் தன்மையை விவரித்துப் புகார்கள் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு அறிக்கை அனுப்ப அதிகாரம் உள்ளது.
  • விதி மீறல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், தனக்காக வாதிடலாம் அல்லது ஒரு சட்டப் பிரதிநிதி மூலம் வாதிட முடியும்.
  • எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முழு விசாரணை செயல்முறையும் முடிக்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்