TNPSC Thervupettagam

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் செயலிகள்

December 26 , 2024 64 days 150 0
  • நுகர்வோர் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும், நீதிக்கான எண்ணிம அணுகலை மேம்படுத்துவதற்காகவும் வேண்டி புதுப்பிக்கப்பட்ட ஜாக்ரிதி செயலியை அரசாங்கம் அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • இந்தச் செயலியானது, மிகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஜாகோ கிரஹக் ஜாகோ செயலி’ மற்றும் ‘ஜாக்ரிதி முகப்பு பக்கம்’ ஆகியவற்றுடன் சேர்த்து அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
  • இணைய வழி வணிக தளங்களில் நெறிமுறை சாராத கருத்துத் திணிப்புகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வதற்கான செயற்கருவிகளுடன் நுகர்வோரை சித்தப்படுத்துவது, நியாயமான நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கூடுதலாக, செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் NCH 2.0 நுட்பத்தினைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் உதவி எண் தளமும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இயற்கை முறை உணவு சோதனை ஆய்வகம் மற்றும் குறைந்த மின்னழுத்த மின் விசை தொகுப்புச் சோதனை வசதி ஆகியவை முறையே கௌகாத்தி மற்றும் மும்பையில் உள்ள தேசியப் பரிசோதனை மன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்