கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடையே புதிய நுண் கண்டம் ஒன்றினை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கண்டம் ஆனது சுமார் 58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று அறிவியலாளர்கள் குழு கருதுகிறது.
இதற்கு டேவிஸ் ஜலசந்தி தொல்-சிறு கண்டம் என்று பெயரிடப் பட்டுள்ளது.
கிரீன்லாந்துக்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள் மற்றும் கடல் பரப்பின் விரிவாக்கம் ஆகியவை இந்த நுண் கண்டத்தின் உருவாக்கத்திற்கு காரணம் ஆகும்.
டேவிஸ் ஜலசந்தியானது லாப்ரடோர் கடல் மற்றும் பாஃபின் விரிகுடா ஆகிய இரண்டு நீர்நிலைகளை இணைக்கிறது.