TNPSC Thervupettagam

புதிய நெல் ரகம் - MGR 100

December 1 , 2017 2421 days 947 0
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தோடு ஒத்திசையும் வகையில் அவரின் நினைவாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட “MGR 100” எனும் புதிய நெல் ரகத்தை தமிழக முதல்வர் தஞ்சாவூரில் வெளியிட்டார்.
  • CO(R)50 மற்றும் BPT 5204 எனும் இரு இரகங்களின் கலப்பினால் (Crossing) உருவாக்கப்பட்ட CO-52 எனும் நெற் இரகமே MGR 100 என பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த இரகமானது அதிக உற்பத்தியை தரவல்லது. சிறந்த தானிய தரத்தையும், நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறனும் கொண்டது.
  • CO-52 இரகமானது MGR 100 என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தாலும் மத்திய விதைகள் துணைக் குழுவின் இரக வெளியீடுகள் மற்றும் அறிவிப்பிற்கான அரசிதழில் வெளியிட TNAU எதிர்நோக்கி வருகின்றது.
  • 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது (TNAU – Tamil Nadu Agriculture University) MGR (COR-H1) எனும் இந்தியாவின் முதல் கலப்பு (ஹைபிரிட்) நெல் இரகத்தை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்