ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனமானது (The Tamil Nadu Rice Research Institute - TRRI) குறுகிய காலத்தில் வளர்ச்சியடையக் கூடிய ADT 53 என்ற நெல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த குறுகிய கால நெல் வகையின் முதிர்வுக் காலம் 105 முதல் 110 நாட்கள் ஆகும்.
ADT-53 என்ற இந்த புதிய வகையானது விளைச்சல் மற்றும் தரம் ஆகியவற்றில் ADT-43 வகையை விட மேலோங்கி இருப்பதால் விவசாயிகளுக்கு இது ஒரு வரம் போன்றதாகும்.
இந்த புதிய நெல் வகையானது,
டெல்டா மாவட்டங்களின் குறுவை அல்லது கோடைக் காலங்கள்
இதர மாவட்டங்களின் சொர்ணவாரி அல்லது நவராய் காலங்கள்
ஆகிய காலங்களில் விவசாயிகளுக்குப் பொருந்துவதாக அமையும்.
இது 62 சதவிகிதம் அரைபடும் திறனையும் 65 சதவிகிதம் முழு அரிசித் திறனையும் கொண்டுள்ளது.
மேலும் இது துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது.
ADT – 53 வகையானது ADT - 43 / JGL – 384 ஆகியவற்றின் கலப்பு வகை ஆகும்.