அமெரிக்காவின் வடக்கு மத்திய நெப்ராஸ்காவில் உள்ள மணல்குன்றுகளில் 12 மடிப்பு சமச்சீரமைப்பு கொண்ட புதிய வகை பகுதியளவுப் படிகத்தினை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பகுதியளவுப் படிகமானது, மின்னல் தாக்குதலால் அல்லது ஒரு குன்றுகளுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பியால் உருவாக்கப்பட்ட தற்செயலான மின்சார ஓட்டத்தின் போது உருவாக்கப்பட்டது.
பகுதியளவுப் படிகம் என்பது அடிப்படையில் ஒரு படிகம் போன்ற பொருளாகும்.
ஒரு படிகத்தில், அணுக்கள் தொடர் மீள்வு வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஒரு பகுதியளவு படிகத்தில், தொடர் மீள்வு சாராத வடிவத்தில் அணுக்கள் அமைக்கப் பட்டிருக்கும்.