புதிய பணத்தாள்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினை
October 19 , 2017 2642 days 888 0
பாதுகாப்பு காரணங்களை மேற்கொள்காட்டி, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் “தூய்மை இந்தியா திட்டத்தின்” இலச்சினையை அச்சிடுவதற்கான முடிவைப் பற்றிய தகவல்களை பகிர மத்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
தகவல் உரிமைச்சட்டம் 2005,பிரிவு 8(1) (a)-ன் கீழ் பொதுப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளைத் தவிர வங்கிகளிலுள்ள பணத்தைப் பற்றிய வடிவம், பாதுகாப்பு அம்சங்கள், தயாரிப்பு பொருள் பற்றிய தகவல்கள் பகிர்வது விலக்களிக்கப்பட்டுள்ளது.
2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் “Ek Kadam Swachhata ki Aur” (A Step towards Cleanliness / தூய்மையை நோக்கி ஓர் அடி) எனும் செய்தியும், தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினையும் அச்சிடுமாறு வழங்கப்பட்ட ஆணையின் நகல்களை தருமாறு மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரப்பட்டது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரத்துறையிடம் (Department Of Economic Affairs) தகவல் கோரும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விவகாரத்துறையானது நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், பாதுகாப்பு ஆவணங்கள் போன்றவையோடு தொடர்புடைய கொள்கை வரையறுப்பும், ரூபாய் நோட்டு அச்சிடல், நாணயங்கள் செய்தல் போன்றவற்றோடும் தொடர்புடைய திட்டமிடல் ஒருங்கிணைப்புகளில் உள்ள சிக்கலை தீர்க்கும் அமைப்பாகும்.
பொருளாதார விவகாரத்துறை (DAE) இந்த விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ளது.
RBI சட்டம் 1934, பிரிவு 25 ன்படி வங்கி நோட்டுகளின் தன்மை, மாதிரி, வடிவமைப்புப் பொருட்கள் ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்ட பின் மத்திய அரசின் ஒப்புதலின்படி உருவாக்கப்படும்.