TNPSC Thervupettagam
October 22 , 2023 401 days 319 0
  • தாதுக்கள் முதல் நட்சத்திரங்கள் வரையிலான உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் புதிய பரிணாம விதியை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர்.
  • உயிர்களின் தோற்றமானது ஒற்றை உயிரணு கொண்ட இனத்தில் தொடங்கி பல உயிரணு கொண்ட உயிரினங்களாக பரிணமித்தது என்பதால், பூமியின் தாதுக்கள், எடுத்துக்காட்டாக, மிகவும் பல்கலப்பு தொகுதியானதாக மாறி பன்முகத்தன்மையை உருவாக்குகின்றன.
  • இது உயிரியல் பரிணாமத்திற்கு உந்துதல் அளித்தது.
  • பல்லுயிர்ப் பெருக்கம் ஆனது தாதுப் பன்முகத்தன்மைக்கும் தாதுக்களின் பன்முகத் தன்மை பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் வழிவகுத்தது.
  • உயிரியல் அமைப்புகள் மற்றும் தாது ஆகிய இரண்டு அமைப்புகளும் இன்று நாம் அறிந்த உயிரினங்களை உருவாக்குவதற்காக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டன.
  • அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் புதிய கட்டமைப்பு அல்லது புதிய அமைப்பு நன்றாக செயல்பட்டு, அதன் செயல்பாடுகள் மேம்படும் போது பரிணாமம் ஏற்படுகிறது.
  • டார்வின் அவர்கள் இந்தச் செயல்பாட்டினை தப்பிப்பிழைத்தல் என்ற கோட்பாடாக வரையறுத்தார்.
  • ஆனால் புதிய ஆய்வு ஆனது இயற்கையில் நிகழும் குறைந்தது மூன்று வகையான செயல்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது.
  • முதல் செயல்பாடு நிலைப்புத்தன்மை, அதாவது அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் நிலையான அமைப்புகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து உயிர்வாழும்.
  • இரண்டாவதாக ஆற்றல் வழங்கலுடன் கூடிய இயக்கவியல் அமைப்புகளை உள்ளடக்கியது.
  • மூன்றாவது செயல்பாடு "புதுமை" - புதிய நடத்தைகள் அல்லது குணாதிசயங்களை உருவாக்கக்கூடிய புதிய கட்டமைப்புகள் அல்லது அமைப்புகளை கொணருவதற்கான அமைப்புகளின் போக்கு ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்