TNPSC Thervupettagam

புதிய பரிவர்த்தனை வர்த்தக நிதியம்: “பாரத் 22”

August 5 , 2017 2716 days 1101 0
  • மத்திய நிதி அமைச்சகம், “பாரத் 22” என்ற புதிய பரிவர்த்தனை வர்த்தக நிதியத்தினை (Exchange Traded Fund , ETF)அறிவித்துள்ளது
  • “பாரத் 22”நிதியமானது மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் , யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் SUTTI (Specified Undertaking of Unit Trust of India (SUUTI) ஆகியவற்றின் 22 பங்குகளை உள்ளடக்கிய நிதியம் ஆகும்.
  • ‘பாரத் 22’என்பது நன்கு பன்முகப்படுத்தப்பட்ட 6 துறைப்பிரிவுகளைக் கொண்டது. அவை, அடிப்படைப் பொருட்கள், எரிசக்தி ஆற்றல், நிதித்துறை, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (Fast-moving consumer goods, FMCG), தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவையாகும்.
  • ‘பாரத் 22’ குறியீடானது ஆண்டுதோறும் மறுசீரமைக்கப்படும் . ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஏ.எம்.சி ஆகிய நிறுவனங்கள் இந்த பரிவர்த்தனை வர்த்தக நிதியத்தின் மேலாளராக செயல்பட இருக்கின்றன.
  • ஆசியா இன்டெக்ஸ் தனியார் நிறுவனமானது (Asia Index Private Limited) இந்நிதியின் குறியீட்டு வழங்குனர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்