அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுத் தொடர்களின் கிரேட் நிக்கோபார் தீவுகளில் ஹார்ஸ்பீல்டு கரும்பச்சை குயில்கள் (Horsfield’s Bronze Cuckoo bird) காணப்பட்டதாக ஆசிய பறவைகள் கவனிப்பு (Birding ASIA) எனும் நூலில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
இதன் தாயகம் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா ஆகும்.
இந்தப் பறவை இந்தியாவில் காணப்படுவது இதுவே முதன்முறையாகும்.
நாட்டின் நிலப்பகுதியில் 0.25 சதவீத பரப்பை மட்டுமே கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளானது சுமார் 350 வெளிநாட்டுப் பறவைகளுக்குப் புகலிடமாக உள்ளது.