புதிய பல்முனையோட்ட மின்பகுளி மின்கலத் தொழில்நுட்பம்
May 19 , 2023 558 days 297 0
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, ‘நீர்மம் சாராதக் கரிம ஆக்சிஜனேற்ற-ஒடுக்கப் பல்முனையோட்ட ஒரு மின்பகுளி மின்கலத்தினை’ உருவாக்கி உள்ளது.
கரிம இரசாயனங்களின் ஒரு வகுப்பான ‘பைரிலியம் உப்புகளை’ பயன்படுத்தி புதிய வகை மின்பகுளிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பொருத்தமானக் கட்டமைப்பு மாற்றங்களுடன் அதனால் பெரும் ஆற்றலைச் சேமிக்க முடியும் வகையில் இந்த இரசாயனங்கள் உயர் மின்னழுத்தச் செயல்பாடுகள் நடைபெற வழி வகுக்கின்றன.
இந்த மின்பகுளிகள் அதிக மின்னோட்ட அடர்த்தி மற்றும் மின்னழுத்தத்தைக் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மின்னோட்ட மின்கலங்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலம், சல்பூரிக் அமிலம் மற்றும் கார உலோக ஹைட்ராக்சைடுகள் போன்ற நீர்மம் சார்ந்த மின் பகுளிகளைக் கொண்டுள்ளது.
மின்பகுளிகளில் உள்ள நீர், மின்னாற் பகுப்புக்கு உட்படுவதால், அது செயல்பாட்டு மின்னழுத்த வரம்பு மற்றும் ஆற்றல் அடர்த்தியைக் குறைக்கிறது.
இதில் நீர்மம் இருப்பதால் மின்கல கூறுகளின் மீது அரித்தல் ஏற்பட வழி வகுத்து, அதன் ஆயுட்காலம் மற்றும் செயல்திறனைக் குறைக்கிறது.