கேரளாவில் கொல்லத்தில் உள்ள கும்பெளருட்டி பகுதியில் உள்ள இயற்கை காடுகளில் ஓடோகிளாடியம் சஹ்யாத்ரிகம் கண்டறியப்பட்டுள்ளது.
ஓடோகிளாடியம் வகையினைச் சார்ந்த ஓர் இனம் கேரளாவில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சஹ்யாத்ரிகம் என்ற பெயர் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குறிக்கிறது.
ஓடோகிளாடியத்தின் இனங்கள் மருத்துவம், வேளாண்மை மற்றும் அஸ்டாக்சாந்தின் என்ற இயற்கை நிறமியின் உற்பத்தி ஆகியவற்றில் சாத்தியமான நடைமுறை பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.