உலக பாட்மிண்டன் கூட்டமைப்பானது (Badminton World Federation - BWF) பாட்மிண்டன் விளையாட்டின் இரண்டு புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன
ஏர் பாட்மிண்டன்
டிரிபில்ஸ்
பாரம்பரியமாக விளையாடப்பட்டு வரும் பேட்மிண்டன் போட்டியானது (பூப்பந்து) ஒரு உள்ளரங்க விளையாட்டாகும். ஆனால் ஏர் பேட்மிண்டன் விளையாட்டானது பரந்த வெளி அரங்கில் விளையாடப்படுவதாகும்.
ஏர் பேட்மிண்டன் விளையாட்டு மற்றும் ஒரு புதிய இறகுப் பந்து விளையாட்டு ஆகியவை சீனாவின் குவான்சோவில் தொடங்கப்பட்டன.
வெளிப்புற முறையிலான விளையாட்டானது மண் மற்றும் சிறிய பரிமாணமுள்ள திடல்கள் போன்ற அனுமதிக்கப்பட்ட மைதானங்களில் வெறுங்காலுடன் விளையாடப்படுவதாகும்.
“டிரிபில்ஸ்” முறையில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களைக் கொண்டிருக்கும். அவற்றில் ஒருவர் கட்டாயம் மகளிராக இருக்க வேண்டும்.