மக்களவை சபாநாயகர் பொதுக் கணக்குக் குழு (PAC) உட்பட ஆறு புதிய பாராளுமன்றக் குழுக்களை அமைத்துள்ளார்.
பாராளுமன்றக் குழுக்கள் அரசியலமைப்பின் 105 மற்றும் 118 ஆகிய சரத்துகளில் இருந்து அதற்கான அதிகாரத்தைப் பெறுகின்றன.
PAC தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் K.C. வேணுகோபால் நியமிக்கப் பட்டுள்ளார்.
பொதுக் கணக்குக் குழு 1921 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஒரு நிர்வாக அமைப்பு அல்ல எனவே இது ஆலோசனை வழங்கீடு சார்ந்த முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும்.
இது தற்போது மக்களவை சபாநாயகரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 உறுப்பினர்கள் என மொத்தம் 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
மதிப்பீட்டுக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு போன்ற மற்ற இரண்டு நிதிக் குழுக்கள் ஆளும் கட்சித் தலைவர்களால் தலைமை தாங்கப்படும்.
மக்களவை சபாநாயகர் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக நலக் குழுவின் தலைவராக கணேஷ் சிங்கினை நியமித்துள்ளார்.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான குழுவின் தலைவராக ஃபக்கன் சிங் குலாஸ்தே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட அனைத்துக் குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும் என்பதோடு அவை மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளில் இருந்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் இன்னும் 24 துறை சார்ந்த நிலைக் குழுக்களை அமைக்க வில்லை.