புதிய புத்தாக்க எரிசக்தி இயக்கத்தை தொடங்கியுள்ளது ஒடிசா
August 27 , 2017 2679 days 923 0
நிகர அளவீட்டு முறை மூலம் (Net metering system) மேற்கூரை சூரிய ஒளி தயாரிப்பு மின் கட்டமைப்பை தொடங்கியுள்ளது ஒடிசா
புத்தாக்க எரிசக்தி உருவாக்கலில் பொதுமக்களின் பங்கெடுப்பை ஊக்குவிக்கும் வகையிலான இந்த இயக்கத்தினை ஒடிசா முதல்வர் புவனேஷ்வரில் தொடங்கி வைத்துள்ளார்.
மாநில அரசாங்கத்தால் 30 சதவீத மானியம் வீடு மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறது.
தற்போது, மேற்கூரை சூரிய ஒளி உற்பத்தித் திட்டத்திற்கு ஒரு கிலோவாட்டுக்கு 70000 ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சேவைகள் குறித்த நேரத்தில் கிடைக்கப் பெறுவதற்காக திட்டத்தின் பங்கேற்பாளர்கள், வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்வதற்கு ஏதுவாகRTSODISHA.GOV.IN என்ற இணைய வாயிலும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலமாக நுகர்வோர்கள் தங்கள் வீட்டுக்கூரையின் மீது சூரிய ஒளித்தகடுகளை பதித்து பகலில் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.
உபரியாக தயாரிக்கப்பட்ட மின்சாரம் ஆனது மின் கட்டமைப்பிற்கு 220V/440V என்ற முறையில் இணைப்புக் கம்பிகள் மூலம் விற்கப்படும்.
இந்தத் திட்டத்தினை ஒடிசா புத்தாக்க எரிசக்தி வளர்ச்சி முகமையானது (Odisha Renewable Energy Development Agency - OREDA) நடைமுறைப்படுத்துகிறது.