புதிய புவிசார் குறியீடுகளுக்கான விண்ணப்பங்கள் - 2024
October 17 , 2024 37 days 169 0
தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx) ஆனது பின்வரும் மூன்று உணவுப் பொருட்களுக்கு புவி சார் குறியீட்டினைப் பெறுவதற்கான விண்ணப்பத்தினை தாக்கல் செய்துள்ளது.
இராமநாதபுரம் பனங்கற்கண்டு,
கோவில்பட்டி சீவல், மற்றும்
இராமநாதபுரம் பட்டறை கருவாடு.
தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) மதுரை வேளாண் காப்பு மன்றம் (MABIF) ஆனது இதற்கு ஆதரவு தெரிவித்தது.
இராமநாதபுரம் பனங்கற்கண்டு (படிக வடிவ பனை சர்க்கரை) ஆனது இப்பகுதியில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது.
பட்டறை கருவாடு (உலர்ந்த மீன்) என்பது ஒரு பாரம்பரிய உலர் மீன் தயாரிப்பு முறையாகும் என்பதோடு இது மீன்களில் மஞ்சள் தூள் தடவி சேற்றில் புதைத்து உலர வைக்கும் செயல்முறையினை உள்ளடக்கியது.
கோவில்பட்டி சீவல் ஆனது அதன் மிருதுவான அமைப்பு மற்றும் மிகத் தனித்துவமான சுவைக்காக நன்கு அறியப்பட்ட ஒரு பாரம்பரிய நன்கு வறுத்த சிற்றுண்டியாகும்.