மிகவும் பாரம்பரிய கும்பகோண வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவை சமீபத்தில் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
இந்த வெற்றிலையானது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் அதை ஒட்டி உள்ள அய்யம்பேட்டை, சுவாமிமலை மற்றும் இராஜகிரி ஆகிய சில கிராமங்களில் மிகப் பரவலாக பயிரிடப்படுகிறது.
மாணிக்க மாலையானது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளையில் தயாரிக்கப் படுகிறது.
சிவப்பு மற்றும் வெள்ளை நிற அரளிப் பூக்கள் (ஓலியாண்டர்) நொச்சி இலைகளுடன் சேர்த்து மணிகள் போல மடிக்கப் பட்டு பின்னர் கட்டப்படுவதால் அவை மற்ற மலர் மாலைகளுக்கு மத்தியில் தனித்து நிற்கின்றன.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் தேதியின் நிலவரப் படி, தமிழ்நாடு மாநிலமானது இது வரையில் 62 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு பெற்றுள்ளது என்பதோடு அவற்றில் 11 தயாரிப்புகள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும்.