உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஆறு தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களால் ஒரு கருத்தை நிரூபிக்க விற்கப்பட்ட காசியின் புகழ்பெற்ற ‘திரங்கி பர்ஃபி’ என்ற மூவர்ண இனிப்பு வகையும் இதில் அடங்கும்.
உத்தரப் பிரதேசத்தில் புவிசார் குறியீடு பெற்ற பிற பொருட்கள்
பனாரஸ் உலோக வார்ப்பு கைவினைப் பொருள்,
லக்கிம்பூர் கெரி தாரு பூவேலைப்பாடுகள்,
பரேலி கரும்பு மற்றும் மூங்கில் கைவினைப் பொருள்,
பரேலி சர்தோசி கைவினைப் பொருள், மற்றும்
பில்குவா கை அச்சு வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படும் துணிகள்.
இந்த ஆறு புதிய தயாரிப்புகளுடன், உத்தரப் பிரதேசம் இந்தியாவில் அதிக புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளைக் (மொத்தம் 75) கொண்ட மாநிலமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
58 புவிசார் குறியீடுகளைப் பெற்றத் தயாரிப்புகளுடன் தமிழ்நாடு அடுத்த இடத்தில் உள்ளது.