TNPSC Thervupettagam

புதிய புவிசார் குறியீடுகள் - உத்தரப் பிரதேசம்

April 23 , 2024 246 days 856 0
  • உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஆறு தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களால் ஒரு கருத்தை நிரூபிக்க விற்கப்பட்ட காசியின் புகழ்பெற்ற ‘திரங்கி பர்ஃபி’ என்ற மூவர்ண இனிப்பு வகையும் இதில் அடங்கும்.
  • உத்தரப் பிரதேசத்தில் புவிசார் குறியீடு பெற்ற பிற பொருட்கள்
    • பனாரஸ் உலோக வார்ப்பு கைவினைப் பொருள்,
    • லக்கிம்பூர் கெரி தாரு பூவேலைப்பாடுகள்,
    • பரேலி கரும்பு மற்றும் மூங்கில் கைவினைப் பொருள்,
    • பரேலி சர்தோசி கைவினைப் பொருள், மற்றும்
    • பில்குவா கை அச்சு வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படும் துணிகள்.
  • இந்த ஆறு புதிய தயாரிப்புகளுடன், உத்தரப் பிரதேசம் இந்தியாவில் அதிக புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளைக் (மொத்தம் 75) கொண்ட மாநிலமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
  • 58 புவிசார் குறியீடுகளைப் பெற்றத் தயாரிப்புகளுடன் தமிழ்நாடு அடுத்த இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்